Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Coolie படத்தில் ‘கன்னட நடிகர்’ உபேந்திராவின் கதாபாத்திரம் - அப்டேட் கொடுத்த படக்குழு!

05:53 PM Sep 01, 2024 IST | Web Editor
Advertisement

கூலி திரைப்படத்தில் இணைந்த கன்னட நடிகரான உபேந்திராவின் கதபாத்திரம் பெயர் மற்றும் தோற்றம் குறித்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘கூலி’  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், நாசர் மற்றும் அபிராமி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, திரைப்படத்தின் நாடு முழுவதுமான வணிகத்திற்காக பிற மொழி நட்சத்திர நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முயன்று வருவதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே இப்படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசனின் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. இதில், ப்ரீத்தி என்கிற கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். முன்னதாக மலையாள நடிகர் சௌபின் சாகிர் நடிப்பதையும், பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிப்பதையும் கூலி படக்குழு உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சத்யராஜின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அவர் இப்படத்தில் ராஜசேகர் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் படக்குழு அறிவித்தது.


கூலி படத்தில் பிரபல கன்னட நடிகரான உபேந்திரா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் ‘கலீஷா’ கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் உபேந்திரா கூலி படத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது, உபேந்திரா தமிழில் சத்யம் மற்றும் தெலுங்கில் அல்லு அர்ஜுனின் சன் ஆஃப் சத்தியமூர்த்தி ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
actor rajinikanthCoolieLokesh KanagarajUpendra
Advertisement
Next Article