Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி? - வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யாததால் உறுதியாகும் தொகுதி!!

01:10 PM Mar 10, 2024 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடியில் வேறு யாரும் விருப்ப மனு அளிக்காததால் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தவர்களிடம், இன்று நேர்காணல் நடத்தப்படும் என திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அறிவித்திருந்தது. அதன்படி, திமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களுக்கு கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் தொடங்கியது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கிய நேர்காணலில் தொகுதி நிலவரம், வெற்றி பெறும் வாய்ப்பு குறித்து வேட்பாளர்களிடம் கேட்டறியப்பட்டன. கன்னியாகுமரி, தருமபுரி, கடலூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பொள்ளாச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 தொகுதிகளுக்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கான நேர்காணல் முடிவடைந்துள்ளது. தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி தவிர வேறு யாரும் போட்டியிட விருப்ப மனு அளிக்காததால், கனிமொழியே மீண்டும் வேட்பாளாரக நிற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
DMKElections2024Kanimozhi KarunanidhiLok sabha Election 2024MK StalinParliament Election 2024tamil naduThoothukudi
Advertisement
Next Article