Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியானது சூர்யாவின் "கங்குவா" டிரைலர்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

02:20 PM Aug 12, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று (ஆக.12) வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மாநகராட்சிகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

’கங்குவா’ திரைப்படத்தின் பிரம்மாண்டமும், பின்னணி இசையும் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. தீவு, மர்மம் என பின்னணி இசையுடன் தொடங்கும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. இதில், வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளார். டிரைலர் முழுவதும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. சூர்யாவின் வசனங்களும், தேவிஸ்ரீ பிரசாத் இசையும் ரசிகர்களின் கவனம் ஈர்க்கின்றன.

Tags :
BobbyDeolGnanavelrajaKanguvaSiruthaisivaSuriyaTrailer
Advertisement
Next Article