Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘கங்குவா’ டீசர் வெளியானது!

07:21 PM Mar 19, 2024 IST | Web Editor
Advertisement

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடித்து வருகிறார்.

உலகளவில் 38 மொழிகளில் ‘கங்குவா’ வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தன. ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், அடுத்தாண்டு மத்தியில் திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், அண்மையில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த பாபி தியோல்,  ‘உதிரன்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் காரணமாக சூர்யா நடிப்பில் கடந்த வருடம் ஒரு படம் கூட வெளியாகவில்லை. சூர்யா நடித்து கடைசியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு 'எதற்கும் துணிந்தவன்' படம் வெளிவந்தது. இந்தப்படத்தின் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டீசரை படக்குழு இன்று (19.03.2024) வெளியிட்டுள்ளது.

Tags :
Bobby DeolCinema updatesKanguvasiruthai sivaSuriyaTeaser
Advertisement
Next Article