Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ரூ.20 கோடி செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது" - ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

09:01 AM Nov 12, 2024 IST | Web Editor
Advertisement

20 கோடி ரூபாயை சொத்தாட்சியரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், ரூ.20 கோடியை நாளைக்குள், அதாவது நவம்பர் 13ஆம் தேதிக்குள் செலுத்தாமல் அந்த படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திவால் ஆனவராக அறிவிக்கப்பட்ட மறைந்த அர்ஜுன் லால் என்பவரிடம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பெற்ற கடனை வசூலிப்பது தொடர்பாக கூறியபடி பணத்தை செலுத்தவில்லை என சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இதனை அடுத்து, ரூ.20 கோடியை வரும் 13ஆம் தேதிக்குள் உயர்நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக்கூடாது என ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.55 கோடியை செலுத்தினால் மட்டுமே ‘கங்குவா’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அந்த பணத்தை செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாளைக்குள் ரூ.20 கோடியை செலுத்தினால் மட்டுமே ‘கங்குவா’ படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
Next Article