வசூலில் கலக்கும் ‘காந்தாரா சேப்டர் 1’... 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘காந்தாரா’. இதன் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் முன்கதையாக ‘காந்தாரா சாப்டர் 1’ உருவானது. இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் உருவான இந்த படம், புராணங்களால் நிரம்பிய கதைக்களத்தில், கண்கவர் காட்சியமைப்புகளுடன், பார்வையாளர்களை தெய்வீகமும் சக்தியும் நிறைந்த பண்டைய உலகத்துக்குக் கொண்டு செல்லும் படைப்பாக உருவாகியுள்ளது.
ரிஷப் ஷெட்டி இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவாளராக அரவிந்த் S காஷ்யப் பணியாற்றியுள்ளார். B.அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘காந்தாரா சேப்டர் 1’ தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கடந்த அக்.2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.427.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.