Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

09:54 AM Jun 01, 2024 IST | Web Editor
Advertisement

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

Advertisement

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும்
வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத
பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில் இந்த ஆண்டு வைகாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதனையொட்டி வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

பின்னர் வைகுண்ட பெருமா சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கொடி மரத்தின் அருகே எழுந்தருளினார்.  இதனையடுத்து கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜை செய்து, வேத மந்திரங்கள் ஒலிக்க,  மேளதாளம் முழங்க கோயில் பட்டாச்சாரியார்கள் தங்க கொடிமரத்தில் கருடாழ்வார் கொடியை ஏற்றி வைத்து பிரம்மோற்சவத்தை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து,  நவ சந்தி பூஜை செய்யப்பட்ட நிலையில், ஸ்ரீதேவி பூதேவியுடன் வைகுண்ட பெருமாள் கோயில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  வைகாசி மாத பிரம்மோற்சவத்தையொட்டி நாள் தோறும் காலை, மாலை என இரு வேளையும்
பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா வந்து
பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

Tags :
#brahmotsavamfestivalKanchipuramVaikunta Perumal Temple
Advertisement
Next Article