Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் - வெகுவிமரிசையாக நடைபெற்ற ஆடி கருட சேவை உற்சவம்!

08:27 PM Jul 21, 2024 IST | Web Editor
Advertisement

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆடி பௌர்ணமியையொட்டி ஆடி கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Advertisement

உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வருடத்திற்கு மூன்று
கருட சேவைகள், அதாவது வைகாசி ,ஆனி , ஆடி மாதங்களில் நடைபெறும். இந்த ஆடி
கருட உற்சவம் கஜேந்திர மோட்சம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆடி மாதமும்
பௌர்ணமி நாளன்று இந்த உற்சவம் நடைபெறும்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் சாபம் பெற்ற
கந்தர்வன் எனும் முதலை, யானையின் காலை கவ்விய பொழுது யானையானது வலி
பொறுக்காமல் பூக்களை தும்பிக்கையால் எடுத்து பெருமாளே என அழைத்ததாகவும்,
யானையின் குரல் கேட்டு வரதராஜ பெருமாள் எழுந்தருளி சக்கரத்தை ஏவி யானையையும்
முதலையும் பிரித்து இருவருக்கும் மோட்சம் அளித்ததால் கஜேந்திர மோட்சம் என
அழைக்கப்படுகிறது.

கருட சேவை உற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மஞ்சள் நிற பட்டுடுத்தி, மல்லி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட மலர்களைக் கொண்டு தருவித்த மாலைகள் அணிந்து, திருவாபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் அனந்த சரஸ் குளம் அருகே காட்சியளித்தார். பின்னர் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதர் நான்கு மாடி வீதிகளை வளம் வந்து, கோயிலை அடைந்தார். வழியெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags :
BakthidevoteesGaruda UtsavamKanchipuramVaradharaja Perumal Temple
Advertisement
Next Article