Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காஞ்சி காமாட்சியம்மன் கோயில் மாசி மாத பிரம்மோற்சவம்! - பக்தர்கள் திரளாக சாமி தரிசனம்!

07:09 AM Feb 20, 2024 IST | Web Editor
Advertisement

மாசி மாத பிரம்மோற்சவச்சத்தை தங்க பட்டு உடுத்தி , லஷ்மி , சரஸ்வதி தேவியருடன் ஒன்பது தலை நாக வாகனத்தில் வீதி உலா வந்து காமாட்சியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Advertisement

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த மூன்று
நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து,  ஐந்து நாளான நேற்று இரவு காமாட்சி ஒன்பது தலை நாக வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு
காட்சியளித்தார்.

இதையும் படியுங்கள் : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி மீண்டும் போட்டியிட கொடுக்கப்பட்ட 32 விருப்ப மனுக்கள்!

இதையடுத்து, தங்க நிற பட்டு உடுத்தி கையில் தாமரை வைத்தவாறு காமாட்சியம்மனும், லஷ்மி,சரஸ்வதி தேவியர் ஊதா நிற பட்டுத்தி பல வண்ண நிற மாலை அணிந்து கோயிலில்
இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஒன்பது தலை நாக வாகனத்தில் காமாட்சியம்மன் தங்க நிற பட்டு உடுத்தி தங்க வைர
ஆபரணங்கள் சூடி, மல்லி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பல வண்ண மலர்கள் கோர்த்த
மாலை அணிந்து,தலையில் கிரீடம் தரித்து,அதில் பிறை சந்திரன் சூடி காமாட்சி அம்மன் உடன் லஷ்மி , சரஸ்வதி தேவியருடன் நான்கு ராஜ வீதிகள் வலம் வந்தார். மேலும், மங்கல மேல தானங்கள் ஒலித்தவாறு சாமி வீதி உலா நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் வழியெங்கும் ஏராளாமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags :
#amman#brahmotsavam#kanchidevoteesKamatshyamman TempleSami Darshan
Advertisement
Next Article