Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'காஞ்சனா 4' படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை?

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.
01:02 PM Jan 29, 2025 IST | Web Editor
Advertisement

கடந்த 2011ம் ஆண்டு வெளியான  'காஞ்சனா' திரைப்படம்  மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக 2015-ல் 'காஞ்சனா 2' மற்றும் 2019-ல் 'காஞ்சனா 3' என அடுத்தடுத்த பாகங்களை ராகவா லாரன்ஸ் இயக்கினார். இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு 'காஞ்சனா 4' என பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : #America-வில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் உயிரிழப்பு!

இப்படத்தை ராகவேந்திரா புரடக்சன் மற்றும் கோல்டன் மைன் நிறுவனம் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஏற்கனவே பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், பாலிவுட் நடிகை நோரா பதேகியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நோரா பதேகி தமிழ் சினிமாவில் தடம் பதிக்க இருப்பதாக பேசப்படுகிறது.

இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் 'காஞ்சனா 4' படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது பான் இந்திய படமாக உருவாகும் இப்படத்தை, ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Kanchana 4Nora FatehiPooja Hedgeraghava lawrence
Advertisement
Next Article