Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட் போதுமான ஆதரவை பெற்றார் கமலா ஹாரிஸ்!

09:51 AM Jul 24, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி சாா்பில் போட்டியிடுவதற்குத் தேவையான கட்சி உறுப்பினா்களின் ஆதரவை இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸ் பெற்றுள்ளாா்.

Advertisement

நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19-ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கினார். பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டதுடன் டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார். மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக கூறினார்.

இவை ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி அவர் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார் என்றும் அவர் போட்டியிட வேண்டாம் என்றும் ஜனநாயக கட்சியினர் தெரிவித்தனர்.  தொடர்ந்து அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் தெரிவித்தார். இதனை அடுத்து ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிட ஜோ பைடன் ஆதரவு தெரிவித்தார்.

இந்த நிலையில்,  கட்சி வேட்பாளரைத் தோ்ந்தெடுக்கும் பிரதிநிதிகளின் போதுமான ஆதரவை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.  இது குறித்து ஊடகம் தெரிவித்துள்ளதாவது, "ஜனநாயகக் கட்சி வேட்பாளா் போட்டியில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

அந்தப் போட்டியில் ஹாரிஸ் வெற்றி பெற 1,976 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை. ஆனால், அதைவிட அதிக எண்ணிக்கையிலான கட்சிப் பிரதிநிதிகள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். இதன்மூலம், நவம்பா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி சாா்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது" என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "பிரசாரத்தைத் தொடங்கும்போதே, போதிய ஆதரவு பெறவேண்டும் என்று விரும்பினேன்.  குடியரசுக் கட்சி வேட்பாளா் ஆவதற்குத் தேவையான பிரதிநிதிகளின் ஆதரவு எனக்குக் கிடைத்துள்ளது மிகவும் பெருமையளிக்கிறது. விரைவில் கட்சி வேட்பாளா் என்ற அந்தஸ்தை முறைப்படி ஏற்பதில் ஆா்வமுடன் உள்ளேன். தோ்தலில் போட்டியிட எனக்கு ஆதரவளித்த ஜோ பைடனுக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

Tags :
Donald trumpJoe bidenKamala harrisPresidential ElectionUS ElectionUS Elections2024USA
Advertisement
Next Article