Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸ்?

09:41 AM Jul 04, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலக நெருக்கடிகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

Advertisement

ஜோ பைடனுக்கும், டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே முதன்முறையாக கடந்த வாரம் நடந்த நேரடி விவாதத்தில் பைடன் தடுமாறியதால், அவருக்குப் பதிலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸை தேர்தலில் போட்டியிடச் செய்ய வேண்டும் என்று ஆளும் ஜனநாயகக் கட்சிக்குள் கோரிக்கைகள் எழுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து டெக்ஸாஸ் மாகாணத்துக்கான ஜனநாயகக் கட்சி எம்பி லாயிட் டாகட் கூறுகையில், ‘ஜோ பைடனின் வாதிடும் திறன் மோசமாக உள்ளதால் அவர் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். எனவே, அவர் போட்டியிலிருந்து விலகவேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

மீண்டும் அதிபராகும் முயற்சியை கைவிடுமாறு பைடனை வலியுறுத்த 25 ஜனநாயக  கட்சி எம்பிக்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. பென்சில்வேனியாவுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் சம்மர் லீ வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுவதைக் கைவிட்டால் அவருக்குப் பதிலாக கமலா ஹாரிஸ் தான் டிரம்ப்பை எதிர்த்து களமிறக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, போட்டியிலிருந்து விலகுவது குறித்து ஜோ பைடன் பரிசீலித்து வருவதாக  ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் வெளியான செய்தியை வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது. வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் 79 வயது டொனால்ட் டிரம்ப்பை 81 வயதாகும் ஜோ பைடன் எதிர்கொள்கிறார்.

ஏற்கெனவே வயது மூப்பு காரணமாக ஜோ பைடனின் பேச்சு குளறுவதாக குற்றஞ்சாட்டப்படும் சூழலில், அடுத்த தேர்தலிலும் அவர் போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை அதிக வயதில் அவரால் எதிர் வேட்பாளரை எதிர்த்து முழு திறனுடன் பிரசாரம் செய்ய முடியுமா என்று சந்தேகம் எழுப்பப்பட்டது.

இந்தச் சூழலில், டிரம்புடன் முதன்முறையாக கடந்த வாரம் நடைபெற்ற நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறினார். பேச வார்த்தைகள் இல்லாமல் நீண்ட நேரம் யோசித்தது, புரியாமல் பேசியது, அர்த்தமில்லாமல் பதிலளித்தது போன்ற ஜோ பைடனின் செயல்கள் அவர் மீதான அதிருப்தியை ஜனநாயகக் கட்சியினரின் ஒரு பிரிவினரிடையே ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Joe bidenKamala harrisPresidental ElectionUSA
Advertisement
Next Article