Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கமல்ஹாசனின் #Thuglife “படப்பிடிப்பு நிறைவு” | படக்குழு வீடியோ வெளியீடு!

02:54 PM Sep 24, 2024 IST | Web Editor
Advertisement

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34 ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. சமீபத்தில் கூட நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதை படக்குழுவினர் கொண்டாடினர்.

இப்படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.149.7 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. படம் அடுத்தாண்டு மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
ar rahmanarrKamal haasanManirathnamNews7TamilshootingSilambarasanThug Life
Advertisement
Next Article