நடிகர் சிவகுமாருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன் ....!
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் சிவகுமார். 1965ல் வெளியான காக்கும் கரங்கள் படதத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவக்குமார் கதாநாயகன் குணச்சித்திர கதாபத்திரம் என சுமார் 190க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அத மட்டுமின்றி பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகருக்கான இலக்கணத்தை வகுத்தவர் என்று சிவகுமார் புகழப்படுகிறார். மேலும் அவர் மூன்று முறை பிலிம்பேர் விருதுகளையும், இரண்டு முறை தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றவர். இவரது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சிவக்குமார் இன்று தனது 84 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு தனது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல் ஹாசன் சிவகுமாருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சிவகுமாரண்ணே, ”84 மார்க் போதாது… நூறுதான் நல்ல மார்க்” என்று வாழ்த்தியுள்ளார்.