வேதாரண்யம் அருகே காமாட்சி அம்மன் கோயில் தீமிதி திருவிழா – பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்து நேர்த்திகடன்!
வேதாரண்யம் அருகே காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீமதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலம் கிராமத்தில் உள்ள பழமை
வாய்ந்த காமாட்சி அம்மன் கோயிலில் அமைந்துள்ளது. இந்த காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாத திருவிழாவில் நடைபெற்றது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஆனி மாத திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும், பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.
இந்த ஆனி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : லாகூரில் சாம்பியன் டிராபி இந்தியா- பாகிஸ்தான் போட்டி! பாகிஸ்தானின் முடிவுக்கு இந்தியா என்ன சொல்லும்?
தீமிதி திருவிழாவை முன்னிட்டு காமாட்சியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளித்தார். பின்னர், அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வான வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இந்த தீமதி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.