Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் - 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

05:49 PM Jun 20, 2024 IST | Web Editor
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு எதிர்க் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே விஷச்சாராயம் விற்பனை செய்த கன்னுக்குட்டி என்பவரும் அவரது மனைவியும் கைதாகியுள்ளனர்.  அதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும்,  சிகிச்சையில் இருப்பவர்களுக்கு 50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.  மேலும் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி அவர் இரண்டு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.


விஷச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளியான சின்னத்துரையின் சொந்த கிராமமான சேஷசமுத்திரத்திலும் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. விஷச்சாராய வழக்கில் குற்றவாளி கன்னுக்குட்டிக்கு சாராயம் கொடுத்த சின்னத்துரையின் சொந்த கிராமத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் தற்போது  வரை கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு; காவல்நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் விஷச்சாராய விற்பனை நடைபெற்றதாக FIR-ல் போலீசார் தகவல்

Tags :
#PondicherryJipmerKallakurichiKarunapuramSpuriousLiquor
Advertisement
Next Article