கள்ளக்குறிச்சி விவகாரம் - தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த 18ம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் 59 போ் உயிாிழந்தனா். சிகிச்சையில் இருக்கும் 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பாதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த சம்பவம் தொடா்பாக ஏற்கனவே கருணாபுரத்தை சோ்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், இவருடைய மனைவி விஜயா, சகோதரா் தாமோதரன் ஆகிய 3 பேரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினா்.
அதன் அடிப்படையில், சென்னையில் உள்ள 5 தனியார் ஆலைகளின் உரிமையாளர்கள் உட்பட 7 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சடையன், சிவகுமார், பன்சிலால், கௌதம், ரவி, செந்தில், ஏழுமலை, உள்ளிட்ட 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.