ப்ரீ புக்கிங்கில் வசூல் சாதனை படைக்கும் கல்கி 2898 AD.. இதுவரை எவ்வளவு தெரியுமா?
கல்கி உலகளவில் முதல் நாளில் ரூ.200 கோடி வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் நாக் அஸ்வின் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் தான் கல்கி 2898 ஏடி. வைஜயந்தி மூவிஸின் கீழ் அஸ்வினி தத் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். கடந்த 2020 ம் ஆண்டு அறிவிக்கப் பட்ட இந்த திரைப்படம் கோவிட் தொற்று உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தொடங்க தாமதமானது.
ரூ. 600 கோடி மதிப்புள்ள பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த திரைப்படம் முதலில் தெலுங்கில் படமாக்கப் பட்டது.
இதையடுத்து ஹிந்தியில் படமாக்கப் பட்டது. இது ஒரு அபோகலிப்டிக் உலகதில் நடைபெறும் கதையாக இந்த படம் படமாக்கப் பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரபாஸ், கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வரும் ஜூன் 27ம் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் கிட்டத்தட்ட பல திரையரங்குகளில் முதல் நாளுக்கான டிக்கெட்கள் விற்றுத்தீர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்திலும் பல திரைகளில் மாலைக் காட்சிக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை ரூ. 9 கோடி வரை முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். இதனால், கல்கி உலகளவில் முதல் நாளில் ரூ.200 கோடி வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.