இரண்டே நாட்களில் ரூ.300 கோடியை நெருங்கிய ‘கல்கி 2898 AD’ திரைப்படம்!
'கல்கி 2898 AD' படத்தின் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த தகவலையும் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 AD திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், கமல்ஹாசன் வில்லனாகவும், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் லீடிங் கேரக்டரிலும் நடித்துள்ளனர்.
சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக இப்படத்தை இயக்கியுள்ளார் நாக் அஸ்வின். அதேபோல், பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது கல்கி 2898 AD. இப்படத்திற்கு ஆரம்பம் முதலே அதிக எதிர்பார்ப்பு இருந்ததால், டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங்கில் அடித்து நொறுக்கியது.
தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய 3 மொழிகளிலும் கல்கி 2898 AD படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது. முக்கியமாக ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் ஒரு டிக்கெட் விலை 1300 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. அப்படியிருந்தும் ரசிகர்கள் கல்கி படம் பார்க்க அதிக ஆர்வம் காட்டினர். முதல் நாளே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்த நிலையில், பாக்ஸ் ஆபிசியிலும் ரூ.191.5 கோடி வசூலை வாரி குவித்தது.
இதன் மூலம், பாகுபலி, ஜவான் போன்ற பல படங்களின் முதல் நாள் வசூல் முறியடிக்கப்பட்டது. நேற்று விடுமுறை நாள் இல்லை என்பதால்... இப்படம் 300 கோடியை நெருக்கமா? என கேள்வி எழுந்தது. ஆனால் கிட்ட தட்ட 300 கோடி வசூலை 'கல்கி' திரைப்படம் நெருங்கிய சந்தோஷமான தகவலை தயாரிப்பு நிறுவனமான வைஜெந்தி மூவிஸ் அறிவித்துள்ளது.
அதாவது இப்படம் நேற்றைய தினம் ரூ.298.5 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால்... 5 நாட்களில் 600 கோடி வசூலை வாரி குறிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் கல்கி படத்தை பார்த்து விட்டு, இந்திய சினிமாவில் அடுத்த மையில் கல் என இந்த படத்தை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.