Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'கல்கி 2898 ஏடி' | அமிதாப்பச்சனின் கதாபாத்திர அறிமுக வீடியோ வைரல்!

03:33 PM Apr 22, 2024 IST | Web Editor
Advertisement

‘கல்கி 2898’ படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமான பரவி வருகிறது.

Advertisement

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'.  இத்திரைப்படத்தில் நடிகர்கள் ராணா டகுபதி,  கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.   இப்படம் வரும் மே 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.  இத்திரைப்படம் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.

முன்னதாக 'கல்கி 2898 ஏடி' படத்தில் நடிகர் பிரபாஸின் பெயர் பைரவா எனக் குறிப்பிட்டு படக்குழு போஸ்டரை வெளியிட்டு இருந்தது.  இந்த நிலையில்,  இப்படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு அஸ்வத்தாமா என்று பெயரிடப்பட்டுள்ளது.   இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Tags :
Amitabh BachchanDeepika padukoneKalki2898 ADKamal haasannag ashwinPrabhasSanthose Narayanan
Advertisement
Next Article