Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கலைத்தாயின் மூத்த குழந்தை கமல்ஹாசன் பிறந்தநாள் - சிறப்பு தொகுப்பு..!

10:26 AM Nov 07, 2023 IST | Web Editor
Advertisement

கலைத்தாயின் மூத்த செல்லக்குழந்தையான கமல்ஹாசன் பிறந்தநாள் பற்றி விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.

Advertisement

திரையுலக வரலாற்றில் தவிர்க்கமுடியாத பெயர் கமல்ஹாசன்.  60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துரையில் தடம் பதித்த வெகுசிலரில் கமல்ஹாசன் மிக முக்கியமானவர்.  இன்று பிறந்த நாள் காணும் கமல்ஹாசன் திரைத்துறையில் செய்த சாதனைகளின் பட்டியல் மிக நீண்டது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

5 வயது சிறுவனாக கமல்ஹாசன் அறிமுகமான வரலாறு நமக்கு தெரிந்திருந்தாலும் திரைத்துறையில் அவர் படைத்த வரலாறுதான் 69-வது வயதிலும் அவரை தவிர்க்க முடியாத கலைஞனாக முன்னிறுத்துகிறது.  சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் பணியாற்றி இருந்தாலும் கமல் எனும் கலைஞனுக்குள் இருக்கும் நடிப்பின் பேராற்றலை கண்டு கொண்டவர் இயக்குநர் கே.பாலசந்தர் என்பதை கமல் பல மேடைகளில் பகிர்ந்துள்ளார்.

அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ள இவர் பாலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்.  தொடர்ந்து அவர் இந்திப்படங்களில் நடிக்காததற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அவை அனைத்தும் இந்த கலைஞனை கட்டிப்போட்டுவிடவில்லை.

இன்றும் கலையைக் கற்றுக்கொள்வதில் தலைசிறந்த மாணவனாக தன்னை முன்னிறுத்தும் கமல் செய்த சோதனை முயற்சிகள் தான்,  இன்றையை திரையுலகம் தொட்டு நிற்கும் உயரத்தின் முதல்படி.  புதுமையும் வித்தியாசமும் ரசிகர்களை இவரை நோக்கி சுண்டி இழுத்தன.  நடிப்பின் அடுத்த பரிமாணத்தை நோக்கிய அவரது நகர்வு கமர்ஷியல் ஹீரோ என்பதில் இருந்து தனித்துவக் கலைஞனாக அடையாளப்படுத்தியது.

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் குவாண்டைன் டொரெண்டினோ தான் இயக்கிய கில்பில் படத்தின் சில காட்சிகளை கமல் நடித்த ஆளவந்தான் திரைப்படத்தின் தாக்கத்தில் உருவாக்கியதாக தெரிவித்தார்.  இப்படி இந்திய சினிமாவைத் தாண்டி கமலின் முய்ற்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

திரை உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும்போதே இந்திய அளவில் தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்து,  நற்பணிமன்றங்களாக மாற்றிய முதல் கலைஞன் கமல்ஹாசன்.

கமல்ஹாசன், அமலா நடிப்பில் வசனங்களே இல்லாத படத்திற்கு அவர் வைத்த பெயர் பேசும்படம்.  அவர் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்த தனது 100 வது படத்திற்கு ராஜபார்வை என பெயர் வைத்தார்.  இந்திய திரையுலகில் 1 கோடிரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நடிகரும் இவர் தான்.  இப்படி நடிப்பிலும், செயலிலும் வித்தியாசத்தை வழங்கிக் கொண்டே இருப்பதால்தான் அவர் உலக நாயகன்.

அவள் ஒரு தொடர்கதை , கல்யாண ராமன்,  இந்திரன் சந்திரன்,  அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன்,  அவ்வை சண்முகி,  இந்தியன்,  அன்பே சிவம்,  ஹே ராம், தசாவதாரம்,  விஸ்வரூபம் என அவர் வாழ்ந்த கதாபாத்திரங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.  அதே போல் தமிழ்நாட்டின் அனேக வட்டார வழக்குகளையும் தங்கு தடையின்றி பேசுவதிலும் அவரை மிஞ்ச ஆளில்லை.

லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் மூலம் தன்னை மீண்டும் வசூல் மன்னனாகவும், நடிப்பின் பல்கலைக்கழகமாகவும் நிரூபித்துக் கொண்ட கமல்ஹாசன் கைவசம் அடுத்தும் வரிசை கட்டி நிற்கின்றன திரைப்படங்கள்.  விரைவில் சினிமாவிற்கு முழுக்கு போட்டு முழுநேர அரசியல் களத்தில் இயங்கவுள்ளதாக அவர்குறித்த தகவல்கள் வெளியாகின்றன. ஆனாலும் கலைத்தாயின் முதல் செல்லக்குழந்தை என புகழப்படும் கமல் திரையுலகத்திற்கு டாட்டா காட்டினால் அது திரையுலகத்திற்கே பேரிழப்பு.....

Tags :
Happy Birth Day Kamal HasanHBD Kamal Hasankamalkamal hasanKH234vikram
Advertisement
Next Article