Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கலைமாமணி விருது - நன்றி தெரிவித்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா

நடிகர் எஸ்.ஜெ.சூர்யா கலைமாமணி விருது அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
08:08 PM Sep 24, 2025 IST | Web Editor
நடிகர் எஸ்.ஜெ.சூர்யா கலைமாமணி விருது அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, திரைத்துறையை  சேர்ந்த நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜெ.சூர்யா கலைமாமணி விருது அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  நன்றி செய்தி குறிப்பில்,

"என்னை கலைமாமணியாக தேர்ந்தெடுத்த தமிழக அரசு இயல், இசை நாடக மன்றத்திற்கும், இதுவரை துணை நின்ற அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும். என் அன்பும் ஆருயிருமான என் ரசிக பெருமக்களுக்கும், இந்த பட்டத்தை எனக்கு வழங்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனமார்ந்த அன்பையும் நன்றியையும் தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்"

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
cinemauptatekalaimamaniawardlatestNewsSJSurya
Advertisement
Next Article