அரிஜித் சிங்கின் 'ஹீரியே.. ஹீரியே..' பாடலுக்கு ரசிகர்களான K-Pop குழுவினர்!
கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், அரிஜித் சிங் யின் 'ஹீரியே ஹீரியே' பாடலை ரசிக்க தொடங்கியதாக K - Pop குழுவினர் தெரிவித்தனர்.
தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல இசைக்குழு BTS ஆகும். ஜின், சுகா, ஜே-ஹோப், RM, ஜிமின், V, ஜங்கூக் ஆகிய 7 பேர் அடங்கிய இந்த குழுவுக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த குழுவினரின் பாடல்கள் தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், பொழுதுபோக்காக இருகிறது எனவும் பல இளைஞர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே தென்கொரிய அரசு விதிப்படி அந்நாட்டு இளைஞர்கள் கட்டாயமாக 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி பெற வேண்டும். அந்த வகையில், BTS உறுப்பினர்கள் அனைவரும் ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
K-pop குழுவினர் நாடு முழுவதும் சுற்று பயணம் செய்வது வழக்கம். இந்நிலையில், தற்போது, ஆசிய நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது, ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட K-pop குழுவினர் பல பாடல்களுக்கு நடனம் ஆடினர். குறிப்பாக, அந்த கலை நிகழ்ச்சியில் துல்கர் சல்மான் நடிப்பில் அரிஜித் சிங் மற்றும் ஜஸ்லீன் ராயலின் ஹீரியே ஹீரியே என்ற ஆல்பம் பாடலுக்கு நடனம் ஆடினர். அந்த கலை நிகழ்ச்சியை ரசிகர்கள் பலரும் கொண்டாடினர்.
இதையும் படியுங்கள் : மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட 2750 போதை மாத்திரைகள் : 6 பேரை கைது செய்த காவல்துறை!
இந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடிய பின்னர், 'ஹீரியே ஹீரியே' என்ற பாடலை ரசிக்க தொடங்கியதாக K-pop குழுவினர் தெரிவித்துள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் 'Ride or Die' என்ற புதிய ஆல்பத்தை K-pop குழுவினர் வெளியிட்டனர். இந்த ஆல்பத்தை BTS ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடித் தீர்த்தனர்.