Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாடாளுமன்றத்தில் இருந்து நாற்காலியுடன் வெளியேறினார் ஜஸ்டின் ட்ரூடோ !

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தனது நாற்காலியுடன் நாடாளுமன்றத்தில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறினார்.
07:33 AM Mar 12, 2025 IST | Web Editor
Advertisement

வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின், கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை பிரதமராக ட்ரூடோ தொடருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இதையடுத்து, லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24 வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த சில நாட்களில் அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ நேற்று (மார்ச்.11) நேரில் சந்தித்தார். அப்போது இருவரும் சில மணி நேரம் ஆலோனை நடத்தியுள்ளனர்.

அப்போது தனது பதவிக்காலம் முடிவடைவதால் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஜஸ்டின் ட்ரூடோ, நாடாளுமன்றத்தில் இருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கனடாவில் எம்.பி.யாக இருந்தவர் பதவி விலகியதும் தான் அமர்ந்திருந்த நாற்காலியை கொண்டு செல்லலாம் என்பது நடைமுறை ஆகும்.

Tags :
CanadachairJustin Trudeauleft Parliament
Advertisement
Next Article