Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜூலை 25 படப்பிடிப்புகள் ரத்து! விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தும் பெப்சி!

06:39 PM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

படப்பிடிப்பு தளங்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் பொறுட்டு விழிப்புணர்வு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள பெப்சி அமைப்பு நாளை மறுநாள் ஜூலை 25-ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. 

Advertisement

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் 2 திரைப்பட படப்பிடிப்பு கடந்த 15-ஆம் தேதி முதல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்காக கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஒரு சண்டை காட்சியை படக்குழு எடுத்தது. அப்போது, சண்டை கலைஞரான புது வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த மு.ஏழுமலை (54), 20 அடி உயரத்தில் இருந்து திடீரென தவறி விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை படக் குழுவினர் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிறிது நேரத்தில் இறந்தார்.
இது குறித்து விருகம்பாக்கம் போலீஸார் நடத்திய விசாரணையில், போதிய பாதுகாப்பு உபகரணம் இன்றி படப்பிடிப்பு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.முன்னதாக, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படப்பிடிப்பில் கயிறு அறுந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.

இதுபோல தொடர்ந்து சண்டைக் கலைஞர்கள் மற்றும் லைட் மேன்கள் படப்பிடிப்புகளில் உயிரிழந்து வருவதால், நாளை மறுநாள் (ஜூலை 25) சென்னையில் நடக்கும் படப்பிடிப்புகளை தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனம் அமைப்பு ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

படப்பிடிப்பு தளங்களில் முறையாக பாதுகாப்பு உபகரணங்களும், ஆம்புலன்ஸ்களையும் வைத்தே படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வு கூட்டத்தை ஜூலை 25 அன்று சென்னை கமலா திரையரங்கில் நடத்த உள்ளனர். அன்றைய நாள் சென்னையில் நடைபெறும் பெரிய திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

Tags :
Actor karthiFepsiSardar2shooting
Advertisement
Next Article