Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

’ஜோக்கர் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

04:39 PM Apr 03, 2024 IST | Web Editor
Advertisement

’ஜோக்கர் 2’  திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 9-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Advertisement

டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில்,  ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜோக்கர்'.  இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது.  ஜோக்கராக நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸுக்கு பத்திரிகைகளிடமிருந்தும்,  விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இப்படத்துக்காக அவருக்கு ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.

17 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் ஆர் ரேட்டட் படமான ‘ஜோக்கர்’ திரைப்படம் உலகமெங்கும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது.  இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை டிசி காமிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.

மியூசிக்கல் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் பிரபல பாப் பாடகி லேடி காகா நாயகியாக நடிக்கிறார்.  இப்படத்துக்கு ‘ஜோக்கர்: ஃபாலி அ டியூக்ஸ் (Joker: Folie à Deux) என்று பெயரிடப்பட்டுள்ளது.  இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  மேலும் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

Tags :
Joaquin PhoenixJoker 2Joker MovieTrailerTrailer Release Date
Advertisement
Next Article