Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜோ பைடன் vs டொனால்ட் டிரம்ப்! - தொடங்கியது நேரடி விவாதம் | அனல் பறக்கும் அமெரிக்க தேர்தல் களம்!

08:46 AM Jun 28, 2024 IST | Web Editor
Advertisement
அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில்  தேர்தலுக்கு முன்னதாக பைடன் மற்றும் டிரம்ப் நேரடி விவாதத்தில் பங்கேற்றுள்ளனர். 
விவாதத்தில் கருக்கலைப்பு விவகாரம் தொடர்பான வாதங்கள் சூடுபிடித்தன என்றும், ஆப்கானிலிருந்து அமெரிக்க படை வெளியேறியதற்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்தார் என்றும் தெரிகிறது. மேலும் பணவீக்கம் குறித்து அதிபர் பைடனை டிரம்ப் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இந்த விவாதங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து அதிபர் பைடன் அடுத்து பேசுவார் என்றும் அவர் டிரம்ப் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து காரசாரமாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இருவரின் பேச்சில் யார் பேச்சு அமெரிக்க மக்களை கவர்கிறதோ அவர்கள் தான் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது நேரடி விவாதம் தொடங்கிய நிலையில் அடுத்த கட்டமாக தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் என்றும் அமெரிக்கா மக்கள் தங்கள் அடுத்த அதிபராக யாரை தேர்வு செய்யப் போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Tags :
அதிபர்தேர்தல்Donald trumpJoe bidenUS presidential election
Advertisement
Next Article