தூக்கத்தில் ஜோ பைடன்...3-ம் உலகப்போர் மூள வாய்ப்பு - #Trump எச்சரிக்கை!
அமெரிக்காவில் உள்ள தலைவர்கள் தூங்கிக் கொண்டு இருப்பதால் மூன்றாம் உலகப்போர் மூள வாய்ப்பு உள்ளது என அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், இது குறித்து அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
அமெரிக்காவுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்துவது யார்? எல்லா இடங்களிலும் குண்டுகள் வீசப்படுகின்றன. ஜனநாயக கட்சியினரால் வெளியேற்றப்பட்ட ஜோ பைடன் கலிபோர்னியாவில் உள்ள கடற்கரையில் தூங்குகிறார். கமலா ஹாரிஸ், துணை அதிபர் வேட்பாளருடன் வாகனப் பேரணி நடத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இச்சூழல் மூன்றாம் உலகப்போரை நோக்கி செல்கிறது. மீண்டும் உலகப்போர் வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க வரலாற்றில் முக்கியமான நாள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முதலில் பைடன் போட்டியிட இருந்த நிலையில், பல காரணங்களால் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.