Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜே.என்.1 வைரஸ் தொற்று - WHO வலியுறுத்தல்

11:26 AM Dec 25, 2023 IST | Web Editor
Advertisement

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன.

Advertisement

உலகின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா தொற்றும் இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.

இந்தியாவிலும் சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் அடுத்தடுத்து வரும் நிலையில், இந்த தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிப்பு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நாடுகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிலையில், கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தொற்று சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு தெற்காசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Advertisement
Next Article