3 நாட்களுக்கு புறநோயாளிகள் பிரிவு இயங்காது... புதுச்சேரி ஜிப்மர் அறிவிப்பு!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏப்.10, 14, 18ஆம் தேதிகளில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
06:04 PM Apr 07, 2025 IST
|
Web Editor
Advertisement
ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு விடுமுறை தினங்களான 10.04.2025 (வியாழக்கிழமை) மகாவீரர் ஜெயந்தி, 14.04.205 (திங்கட்கிழமை) டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள், 18.04.205 (வெள்ளிக்கிழமை) ஆகிய மூன்று நாட்களில் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் இந்த மூன்று நாட்களும் அவசரப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது. முன்னதாக ஹோலி பண்டிகையையொட்டி மார்ச் 14ஆம் தேதியும் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Article