Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Jio AI Cloud: அறிமுக சலுகையாக 100 GB வரை இலவச Storage!

06:00 PM Aug 29, 2024 IST | Web Editor
Advertisement

ஜியோ ஏஐ கிளவுட் அறிமுக சலுகையாக 100 ஜிபி வரை இலவச கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும் என்று ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

Advertisement

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 47வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முகேஷ் அம்பானி,

"வரும் தீபாவளியன்று ஜியோ ஏஐ-கிளவுட் அறிமுக சலுகை வெளியிடப்படும். இது கிளவுட் தரவு சேமிப்பு மற்றும் தரவு ஏஜ் சேவைகள். அனைவருக்கும் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய வகையிலும், மலிவு விலையிலும் கிடைக்கும். ஜியோ பயனர்கள் தங்கள் புகைப்படங்கள், விடியோக்கள், ஆவணங்கள், மற்ற அனைத்து டிஜிட்டல் பதிவுகள் மற்றும் தரவுகள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு 100 ஜிபி வரை இலவச கிளவுட் சேமிப்பகத்தைப் பெறுவார்கள். ஏஐ ஆனது ஆடம்பரமாக இருக்கக்கூடாது என்பதை ஜியோ நிறுவனம் உறுதியாக நம்புகிறது. ஏஐ சேவைகள் விலையுயர்ந்த, உயர்தர சாதனங்கள் மட்டுமின்றி அனைத்து சாதனங்களிலும் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்.

பயனாளர்களின் பொருளாதாரப் பின்னணியைப் பொருள்படுத்தாமல், ஏஜயிலிருந்து அனைவரும் பயனடைவார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிளவுட்டில் தரவுகள் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டால் ஏஐ ஆனது அறிவார்ந்த சேவைகளை நெட்வொர்க்கில் வழங்க முடியும். ஜியோவின் வாய்ஸ் அசிஸ்டண்ட்டான 'ஹலோ ஜியோ வையும் புதிதாக அறிமுகப்படுத்திய எஸ்ஸில் சேர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஹலோ ஜியோ, ஆக்ஷன் திரைப்படங்களைக் கண்டுபிடி' என்று சொல்லுங்கள்.

இது உங்கள் அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் மற்றும் பல ஆப்களில் தேடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜிகாவாட் அளவிலான ஏஐ-ரெடி டேட்டா சென்டர்களை அமைக்கவுள்ளது. நாட்டுக்கான ஏஐ உள்கட்டமைப்புக்கான அடித்தளத்தை நாங்கள் அமைத்து வருகிறோம். ஜிகாவாட் அளவிலான ஏஐ-ரெடி டேட்டா சென்டர்களை ஜாம்நகரில் நிறுவ திட்டமிட்டுள்ளோம். அதிக சேமிப்பு தேவைப்படுபவர்களுக்கு மலிவு விலையில் அதிகளவில் பெற்றுக்கொள்ளலாம்” என தெரிவித்தார்.

Tags :
Cloud StorageDiwaliIndiaJioJio BrainMukesh ambaniNews7Tamilnews7TamilUpdatesRelianceReliance Industries
Advertisement
Next Article