Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாரிஸில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற ஜின் - உற்சாகத்தில் BTS ரசிகர்கள்!

12:32 PM Jul 15, 2024 IST | Web Editor
Advertisement

பாரிஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் ஜோதியை ஜின் ஏந்திய படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்று தென்கொரியாவை சேர்ந்த  BTS. ஜின், சுகா,  ஆர்.எம், ஜே-ஹோப்,  ஜிமின், வி,  ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த இசைக்குழு ஏராளமான இசை ஆல்பங்களையும்,  பாடல்களையும் உருவாக்கி உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் பல்வேறு கின்னஸ் சாதனைகளையும், நூற்றுக்கணக்கான விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ளது.

குழுவாக பாடல்களை வெளியிட்டு வந்த  BTS குழுவினர் சமீப காலமாக தனித்தனியாக பாடல்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது BTS குழுவினர் ராணுவ பயிற்சி பெற்று வருகின்றனர். தென்கொரியாவில் இளைஞர்கள் அனைவரும் கட்டாய ராணுவப் பயிற்சி பெறவேண்டும். அந்த வகையில் BTS குழுவினரும் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஜின்னின் பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் தான் வெளியே வந்தார்.

ராணுவப் பயிற்சியைத் தொடர்ந்து தனது துறைரீதியான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக பிடிஎஸ் தொடங்கி 11 ஆண்டுகள் ஆனதையடுத்து கொண்டாடப்பட்ட 2024 BTS Festa என்ற விழாவில் கலந்துகொண்டார். இதன்பின்னர்  “The Half-Star Hotel in Lost Island” என்ற ரியாலிட்டி ஷோவின் 10வது எபிசோட்டில் ஜின் கலந்துகொண்டார். இந்த ரியாலிட்டி ஷோவானது MBC- சேனலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் ஜோதியை ஜின் ஏந்திய படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நேற்று பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகம் அருகே ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்றார். அவரைக் காண பாரிஸில் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

Tags :
BTSJinolympicOlympic TorchParis
Advertisement
Next Article