ஜெருசலேம் பயங்கரவாத தாக்குதல் - பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!
பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா கண்டிக்கிறது என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
07:24 AM Sep 09, 2025 IST
|
Web Editor
Advertisement
இஸ்ரேலின் ஜெருசலேமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement
இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இஸ்ரேல், ஜெருசலேமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.
பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா கண்டிக்கிறது. பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்ட கொள்கையில் இந்தியா உறுதியாக நிற்கிறது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Article