ஹோஷியார்பூரில் தமிழ் வம்சாவளி சீக்கியரான ஜீவன் சிங் மல்லா போட்டி!
ஹோஷியார்பூர் மக்களவைத் தொகுதியில் பகுஜன் திராவிட கட்சி வேட்பாளராக தமிழ் வம்சாவளி சீக்கியரான ஜீவன் சிங் மல்லா போட்டியிடுகிறார்.
18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவும் ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம்கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், மூன்றாம் கட்டத்தில் குஜராத் , கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு வரும் நாளை மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள் : சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிமையாளர் கைது! அடுத்த நடவடிக்கை என்ன? மாநகராட்சி ஆணையர் விளக்கம்!
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மக்களவைத் தொகுதியில் பகுஜன் திராவிட கட்சி வேட்பாளராக தமிழ் வம்சாவளி சீக்கியரான ஜீவன் சிங் மல்லா அறிவிக்கப்பட்டுள்ளார். தனித் தொகுதியான ஹோஷியார்பூரில் போட்டியிடும் ஜீவன், ஹோஷியார்பூர் தொகுதியை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :
"பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கான்ஷி ராம் முதல் முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்டுதான் 1996 ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்வானார். அதனால் இங்கு போட்டியிடுகிறேன். எங்கள் மக்களில் 60 சதவிகிதம் பேர் விவசாய நிலமில்லாத கூலித் தொழிலாளிகளாக தான் இருக்கிறார்கள். சீக்கிய மதத்துக்கு மாறிய பிறகு சாதியில் இருந்து விடுபட்டதாக உணர்கிறேன். ஆனால், அரசியலமைப்புபடி அது நடக்க வேண்டும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் இந்த கட்சி சார்பில், தமிழ்நாட்டை சேர்ந்த திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.