Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

JEE முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு... முக்கிய அறிவிப்பு வெளியீடு!

01:32 PM Dec 07, 2023 IST | Web Editor
Advertisement

வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் முதல்கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பங்களில் திருத்தங்களை செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது அதிகாரப்பூர்வ லாக்-இன் ஐடிக்களை வைத்து, விண்ணப்பத்தில் அளித்த தகவல்களை திருத்த வேண்டுமெனில் திருத்திக் கொள்ளலாம். இந்த வாய்ப்பு டிசம்பர் 8-ம் தேதி இரவு 11.50 மணி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண், வீட்டு முகவரி உள்ளிட்ட சில விவரங்களை மட்டும் மாணவர்கள் திருத்த முடியாது. தேர்வு மையம், தேர்வு தாள் உள்ளிட்ட சில விவரங்களை மட்டும் திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ற இணையதள முகவரியில் சென்று மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யவேண்டியது இருந்தால் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : மிக்ஜாம் புயல் எதிரொலி | காய்கறிகளின் விலை உயர்வு -அதிர்ச்சியில் மக்கள்!

ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் 1-ம் தேதி நிறைவு பெற்றுள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வு ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து, வரும் 2024-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜேஇஇ) தேதிகளை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள நிலையில், விண்ணப்பப் பதிவு நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி நிறைவுபெற்றிருக்கிறது.

இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) உள்ளிட்டவற்றில் மாணவர் சேர்க்கைக்காக ஜேஇஇ தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

அந்த வகையில், அடுத்தாண்டு ஜேஇஇ முதன்மைத் தேர்வின் முதல் கட்டத் தேர்வு ஜனவரி 24 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இரண்டாவது கட்டத் தேர்வு தேர்வு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதிவரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி வழியில் நடைபெறும் இத்தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுற்ற நாளிலிருந்து மூன்று வாரங்களுக்குள் வெளியிடப்படும். மேலும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தேர்வுகள் குறித்த விவரங்களை இணையதளப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
announcedaspirantsentrance examExam DateJEE exam
Advertisement
Next Article