Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக #JayShah தேர்வு!

08:54 PM Aug 27, 2024 IST | Web Editor
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலர் ஜெய் ஷா தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

Advertisement

ஐசிசி தலைவரான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே, மூன்றாவது முறையாக போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். அதோடு அவரது தற்போதைய பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் வாயிலாக ஜெய் ஷா மிகக் குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2019 ஆண்டு அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், 2021 ஆண்டு ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, டிசம்பர் 1 ஆம் தேதி ஐசிசி தலைவராக பதவியேற்கவுள்ளார். தற்போதைய தலைவர் கிரெக் பார்க்லே மூன்றாவது முறையாக பதவியேற்க வேண்டாம் என்று முடிவு செய்ததால் ஜெய் ஷா தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

Tags :
ICCIndiainternational cricket councilJai Shahnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article