ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கலன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Advertisement
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். பிரபல காமெடி நடிகர் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி.ஜே.பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
காதல் கதையை மையாமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ‘என்னை இழுக்குதடி’, ‘லாவண்டர் நேரமே’ பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படம் பொங்கலுக்கு (ஜன.14) வெளியாகும் என நடிகர் ஜெயம் ரவி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.