Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐசிசி பவுலர் தரவரிசை பட்டியலில் #JaspritBumrah மீண்டும் முதலிடம்!

05:52 PM Oct 02, 2024 IST | Web Editor
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், ஆண்களுக்கான டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Advertisement

இந்தியா - வங்க தேச அணிகளுக்கு இடையிலும், நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலுமான டெஸ்ட் தொடர் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரை சில மாறுதல்களைக் கண்டிருக்கிறது. கான்பூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியது. இத்தொடரின் முடிவில் ஜஸ்பிரித் ​பும்ரா, சக வீரரான ரவிச்சந்திரன் அஷ்வினைவிட ஒரு புள்ளி அதிகம் பெற்று இரண்டாவது முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார்.

வங்கதேச பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் நான்கு இடங்கள் முன்னேறி 18வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல் ஹசன் 5 இடங்கள் முன்னேறி 28வது இடத்தைப் பிடித்துள்ளார். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா நியூசிலாந்திற்கு எதிரான தொடரின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 7வது இடத்தைப் பிடித்துள்ளார். 

பேட்ஸ்மேன்களில், வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முதல் போட்டியில் 72 மற்றும்  இரண்டாவது போட்டியில் 51 ரன்கள் அடித்தன் மூலம் டெஸ்ட் பேட்மேன்கள் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 3வது இடத்தைப் பிடித்திருக்கிறார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அதே சமயம் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி 6 இடங்கள் முன்னேறி 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.

டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்த இலங்கையின் அதிரடி பேட்ஸ்மேன் கமிந்து மெண்டிஸ், ஐந்து இடங்கள் முன்னேறி 11வது இடத்தைப் பிடித்துள்ளார். மற்ற இலங்கை வீரர்கள் தினேஷ் சண்டிமால் 20வது இடத்திலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 23வது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஷ்வின் இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வங்கதேசத்துக்கு எதிராக மகத்தான வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. 

Tags :
BowlerCricketICCICC RanklistJasprit Bumrah
Advertisement
Next Article