Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#NASA தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் நியமனம்!

09:04 AM Dec 05, 2024 IST | Web Editor
Advertisement

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

அமெரிக்காவில் கடந்த நவ.5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், தனது போட்டியாளர் கமலா ஹாரிஸை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்காவின் 47-வது அதிபராகிறார் ட்ரம்ப். தொடர்ந்து, அவர் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறும் தலைவர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் என்பவரை டொனால்டு டிரம்ப் நியமித்து உள்ளார். இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் கூறும்போது, "ஒரு நிறைவான வர்த்தக தலைவர், ஏழை பங்காளர், விமானி மற்றும் விண்வெளி வீரரான ஜாரெட் ஈசாக்மேனை நாசாவின் நிர்வாகியாக நியமிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாசாவின் கண்டுபிடிப்பு, தொழில் நுட்பம் ஆகியவற்றில் சாதனைகளுக்கான வழிகளை ஏற்படுத்துவது மற்றும் கற்று கொள்வது ஆகியவற்றை ஜாரெட் வழி நடத்தி செல்வார். ஜாரெட்டின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்" என தெரிவித்தார்.

இதுபற்றி ஜாரெட் ஈசாக்மேன் கூறுகையில், "டிரம்பின் இந்த நியமன அறிவிப்புக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மனித வரலாற்றில் மிக சிறந்த சாதனை படைப்பதில் முன்னணியில் திகழும் நாடாக அமெரிக்காவை வழி நடத்துவதில் ஆர்வத்துடன் இருக்கிறேன்" எனக் கூறினார்.

யார் இந்த ஜாரெட் ஈசாக்மேன்?

ஜாரெட் ஈசாக்மேன் ஷிப்ட்4 என்ற ஆன்லைன் பணபரிமாற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாவார். டிரேகன் இன்டர்நேஷனல் என்ற பாதுகாப்பு விண்வெளி நிறுவனத்தை அவர் இணைந்து நிறுவினார். இது அமெரிக்க பாதுகாப்புத் துறை மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஆதரவை வழங்குகிறது. இவர் இரண்டு முறை விண்வெளிக்கு சென்றுள்ளார். டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான எலான் மஸ்க்குடன் விரிவான நிதி சார்ந்த தொடர்பை ஈசாக்மேன் வைத்திருக்கிறார்.

Tags :
AmericaDonald trumpJared IsaacmanNASAnews7 tamilworld news
Advertisement
Next Article