Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகினார்!

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
06:13 PM Sep 07, 2025 IST | Web Editor
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Advertisement

ஜப்பான் நாட்டின் பிரதமராக லிபரல் டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்த ஷிகெரு இஷிபா உள்ளார். கடந்த  ஜூலை மாதம் நடந்த பார்லியின் மேலவை தேர்தலில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் ஆளும் கட்சி, பெரும்பான்மையை இழந்து விட்டது. இதனை தொடர்ந்து லிபரல் டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்த கட்சினர் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் இஷிபா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

Advertisement

இந்த நிலையில் ஷிகெரு இஷிபா ஜப்பான் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். ஜனாதிபதித் தேர்தலுக்கான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு பொதுச்செயலாளர் மோரியாமாவிடம் கூறியுள்ளேன்.புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையை அவர் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

68 வயதான ஷிகெரு இஷிபா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம ஜப்பான் பிரதமராக பதவி ஏற்றார். இந்த நிலையில் ஓராண்டிற்குள்ளாகவே அவர் பதவி விலகியுள்ளது குறிப்படத்தக்கது.

Tags :
JapanlatestNewsResignshigaruishiba
Advertisement
Next Article