அனிமே ஸ்டுடியோவுக்கு தீ வைத்த நபர் - மரண தண்டனை விதித்து ஜப்பான் நீதிமன்றம் உத்தரவு..!
ஜப்பானில் அனிமே படங்களை உருவாக்கும் ஸ்டுடியோவுக்கு தீ வைத்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
ஜப்பான் நாட்டின் அனிமே திரைப்படங்களுக்கும், தொடர்களுக்கும் உலகளவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நருடோ, ஒன் பீஸ், டெத் நோட், அட்டாக் ஆன் டைட்டன், யுவர் நேம், சுசூமே உள்ளிட்ட ஏராளமான அனிமே தொடர்களையும், திரைப்படங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜப்பான் நாட்டில் அனிமே படங்களை உருவாக்கும் ஸ்டுடியோக்களில், கியோட்டோ அனிமேஷன் ஸ்டுடியோ முன்னணி நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்நிறுவனம் தன்னுடைய கதையை திருடிவிட்டதாக ஷின்ஜி என்பவர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டில் ஆத்திரத்தில் அந்த நிறுவனத்தை தீயிட்டு கொளுத்தினார்.
இதையும் படியுங்கள் : ‘அயலான்’-ஐ பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்...!
இந்த சம்பவத்தில் சுமார் 36 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு கியோட்டோ நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஷின்ஜி மீதான குற்றச்சாட்டு உறுதியான நிலையில், அவருக்கு மரண தண்டனை விதித்து கியோட்டோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.