Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜப்பான் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

03:46 PM Dec 06, 2023 IST | Web Editor
Advertisement

ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஜிப்ஸி படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கிய திரைப்படம் 'ஜப்பான்'.  இதில் கார்த்தி நாயகனாகவும்,  அனு இமானுவேல் நாயகியாகவும் நடித்துள்ளனர்.  மேலும் தெலுங்கு நடிகர் சுனில்,  இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்
நடித்துள்ளனர்.  ஜப்பான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 10-ம் தேதி திரையரங்கில் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

இதையும் படியுங்கள்:  செம்பரம்பாக்கத்தில் நீர்திறப்பு 4,000 கன அடிகளாக குறைப்பு! அடையாற்றின் இரு கரைகளையும் தொட்டபடி பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!  

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.  இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இந்த நிலையில், ஜப்பான் திரைப்படம் வரும் டிச. 11 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

 

Tags :
JapanKarthinews7 tamilNews7 Tamil UpdatesottRaju Muruganrelease date
Advertisement
Next Article