ஜப்பான் திரைப்படம்: முதல் 5 நாட்களுக்கு மட்டும் கூடுதல் காட்சிக்கு அரசு அனுமதி!
தீபாவளியை முன்னிட்டு ஜப்பான் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் கூடுதலாக சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி” படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கியுள்ள படம் ஜப்பான். மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ராஜூ முருகன். அவருடைய முந்தைய படங்கள் கமர்ஷியல் ரீதியிலான படங்களா இல்லாமல் இருந்தது. ஆனால், இந்தப் படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தியுடன் கை கோர்த்திருக்கிறார்.
கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் அவ்வப்போது மாறுபட்ட கதாபாத்திரங்களில், தோற்றங்களில் கார்த்தி நடிப்பது வழக்கம். அதை இந்தப் படத்தில் தொடர்ந்திருக்கிறார். “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான்” ஆகிய இரண்டு படங்களுக்கு இடையில்தான் இந்த வருட தீபாவளிக்கான முதன்மைப் போட்டி. இரண்டில் எந்தப் படம் முந்தப் போகிறது என்பது நவம்பர் 10ம் தேதி தெரிந்துவிடும்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..
“ ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்துக்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி நவம்பர் 10 முதல் 20ஆம் தேதிவரை 10 நாள்களுக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், நவ. 10 முதல் 15ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.