ஜப்பான் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு..!
ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
ஜப்பானின் மேற்குப் பகுதியில் ஜனவரி 1-ம் தேதி பகல் 12 மணிக்கு மேல் 3.5 முதல் 7.6 வரையிலான ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீட்டைவிட்டு வெளியேறினர். ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது.
இஷிகாவா மற்றும் நிகாட்டா ஆகிய மாகாணங்களை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பலர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : 33வது சியோல் மியூசிக் அவார்ட்ஸ் - BTS, BLACKPINK-க்கு விருது...!
ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.