ஜனநாயகன் Vs பராசக்தி? - பொங்கல் ரேசில் விஜய் உடன் சிவகார்த்திகேயன்!
நடிகர் விஜய் - எச் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜனநாயகன்’. கேவிஎன் புரொடெக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படம் விஜய்க்கு கடைசி படம் என்பதாலும் அரசியல் கதைகளத்தில் உருவாகி வருவதாக கூறப்படுவதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என நேற்று(மார்ச்.24) படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் ரேசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதில் “இந்த பொங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து சினிமா ரசிகர்கள் ஜனநாயகன் திரைப்படத்துடன் பராசக்தி திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.