நள்ளிரவில் வெளியாகும் ‘ஜனநாயகன்’ பாடல்.. அனிருத் பதிவு வைரல்!
‘ஜனநாயகன்’ படத்தின் பாடல் குறித்த அனிருத்தின் பதிவு வைரலாகி வருகிறது.
07:59 PM Jun 21, 2025 IST
|
Web Editor
Advertisement
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது அவர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
Advertisement
இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் CWC மோனிஷா ப்ளெஸி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றது. இதற்கிடையே, நடிகர் விஜய் தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், விஜயின் பிறந்தநாளை ஒட்டி இன்று நள்ளிரவு ஜனநாயகன் படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். இதை பகிர்ந்த விஜய் ரசிகர்கள் ஜனநாயகன் படத்தின் முதல் பாடலாக இருக்கலாம் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Next Article