முதல் கர்ஜனைக்கு தயாராகும் ‘ஜனநாயகன்’ - விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட்!
நடிகர் விஜய் – எச் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜனநாயகன்’. கேவிஎன் புரொடெக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படம் விஜயிக்கு கடைசி படம் என்பதாலும் அரசியல் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுவதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்தது.
இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ படத்தின் அட்டேட்டை படக்குழு பகிர்ந்துள்ளது. இது தொடர்பாக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ‘முதல் கர்ஜனை’ என்ற தலைப்பை குறிப்பிட்டு அதை விஜய் பிறந்த நாளான (ஜூன்.22) ஆம் தேதி நள்ளிரவு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.