Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#JKAssemblyElections | இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 54.30% வாக்குகள் பதிவு!

09:26 PM Sep 25, 2024 IST | Web Editor
Advertisement

ஜம்மு & காஷ்மீர் இன்று 26 தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 54.30% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. இதில், காங்கிரஸும், தேசிய மாநாடு கட்சியும் கூட்டணியாக போட்டியிடுகின்றன. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் முதல் கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதி அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகியதாக இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : MUDA நில முறைகேடு விவகாரம் | “விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை!” – சித்தராமையா பதிவு!

இந்நிலையில், இன்று (செப்.25) ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் மிக நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்தனர்.

இந்நிலையில், 26 தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 7 மணி நிலவரப்படி, 54.30% சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ஓரிரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றதால், அதன்பின் துல்லியமான வாக்குப்பதிவு விவரம் வெளியிடப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக். 1ம் தேதியும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதையடுத்து, அக். 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Tags :
JammuAndKashmirElectionsJammuKashmirJammuKashmirAssemblyElections2024JammuKashmirElectionsnews7TamilUpdates
Advertisement
Next Article