Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள் | #NOTA -க்கு கிடைத்த வாக்குகள் எவ்வளவு தெரியுமா?

10:08 AM Oct 09, 2024 IST | Web Editor
Advertisement

ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. அதேபோல், 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் அக்.5ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. சுமாா் 2 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதையும் படியுங்கள் : ” #VineshPhogat -க்கு செல்லும் இடம் எல்லாம் அழிவு தான் ” – விமர்சித்த பாஜக தலைவர்…

ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. ஹரியானாவில் பாஜக முன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கிறது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டமாக நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகளில் 1.48 சதவீதம் பேர் நோட்டாவை தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து, ஹரியானாவிலும் 0.38 சதவீதம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

Tags :
election resultsharyanajammu kashmirNews7Tamilnews7TamilUpdatesNotaVotes
Advertisement
Next Article