ஜம்மு காஷ்மீர் | சுயேட்சை எம்பி Engineer ரஷீதுக்கு பரோல் - பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி!
கடந்த வருடம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான ஒமர் அப்துல்லா தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து NIA-வால் குற்றம் சாட்டப்பட்டு 2019 முதல் சிறையில் இருக்கும் இன்ஜினியர் ரஷீத், சுயேட்சையாக போட்டியிட்டு சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அதற்கு பதிலளித்த என்ஐஏ சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஜினியர் அப்துல் ரஷீத் ஷேக் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்ய என்ஐஏ ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி நீதிமன்றம் இறுதி உத்தரவு வழங்கியதும் நிறைவேற்றப்படும் எனவும் என்ஐஏ தெரிவித்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் வரும் 11,13 தேதிகளில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா எம்.பி அப்துல் ரஷீதுக்கு பரோல் டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.